மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் வரைவு மீதான அவதானிப்புகளை ஆணைக்குழு கோருகின்றது
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (இ ம ஆ) மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான வரைவு பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை 2023 ஆண்டு டிசம்பர் மாதம் 21 திகதி வெளியிட்டது.
மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் வரைவு பற்றிய அவதானிப்புகளை சமர்ப்பிக்குமாறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறது.
உங்கள் அவதானிப்பை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2024 ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்கின்றோம்
HRDs_General-Guidelines-and-Recommendations-draft-Sinhala
