Jun 26, 2021

இலங்கை மனித உரிமைகள் அணைக்குழு சித்திரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் – 2021 ஜூன் 26 தொடர்பான செய்தியை வெளியிடுகிறது.

கட்டுரைகள்

இலங்கை மனித உரிமைகள் அணைக்குழு சித்திரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம் – 2021 ஜூன் 26 தொடர்பான செய்தியை வெளியிடுகிறது.

“சித்திரவதைகளை தடுப்பதற்காக பொறுப்புள்ள அனைத்து அதிகார தரப்பினரும் வினைத்திறனாக செயற்பட வேண்டும்.”

தவிசாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

 

சித்திரவதைகளுக்கு உள்ளானோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினம்  – 2021 ஜூன் 26

சித்திரவதைகளை தடுப்பதற்கான சர்வதேச ரீதியில் முக்கியமான செயற்பாடான சித்திரவதை மற்றும் ஏனைய குரூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடத்துதல் அல்லது தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச சமவாயம் நிறைவேற்றப்பட்ட 1987 ஜூன் 26 ஆம் திகதியை நினைவு கூருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் திகதி சித்திரவதைகளுக்கு உள்ளானோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1987 டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுச் சபை கூட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் அனைத்து வகையிலும் நிலவும் சித்திரவதைகளையும் ஒழிக்கும் நோக்குடன் மேற்குறித்த சமவாயத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அனைத்து உறுப்பு நாடுகளையும் கோருகிறது. அத்துடன் சித்திரவதைக்கு உள்ளாவதால்  மனிதாபிமானமற்ற, குரூரமான வேதனைக்கு உள்ளான அனைத்து பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவி, ஒத்தாசை வழங்குமாறும், அவர்களுக்கு ஆதரவு நல்குமாறும் அனைத்து தரப்பினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் அனைத்து நபர்களிடமும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேலும் கோருகிறது.

HRCSL statement on International Day in Support of Victims of Torture_ 2021 _ Tamil

Font Resize
Contrast

Sorry for the inconvenience caused, the language you’ve requested in currently under construction.

සිදුවෙමින් පවතින අපහසුතාවයට කණගාටුයි, දැනට ඔබ ඉල්ලූ භාෂාව ඉදිවෙමින් පවති.

ஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.