சிறுவர் குரலெழுப்பும் மன்றம்: விண்ணப்பம் கோரல்
15-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தளத்தை உருவாக்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் குரலெழுப்பும் மன்றம் எனும் புதுமையான நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடுசெய்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🗓 விண்ணப்ப இறுதி திகதி: 31/01/2025
📍 தகுதி: மேல் மாகாணத்தில் வசிக்கும் 15-17 வயதுடைய எந்தவொரு சிறுவரும்
🌈 ஏன் சிறுவர் குரலெழுப்பும் மன்றில் (CVF) இணைய வேண்டும்?
💬 உங்கள் குரலை ஒலிப்பதற்கு: இலங்கையில் சிறுவர் உரிமைகள் பற்றிய உங்கள் பார்வைகள், அனுபவங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம்
🤝 மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு: சிறுவர் உரிமைகள் தொடர்பில் செயற்படக்கூடிய பரிந்துரைகளை உருவாக்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு
🌏 உலகளாவிய உத்வேகம் கொள்வதற்கு: ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் கோட்பாடுகளுடன் இணைந்திருங்கள்
💡 தீர்மானமெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு: சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கை வகுப்பில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பு
🔗 எவ்வாறு விண்ணப்பிப்பது:
இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்:: https://forms.gle/6mhMA4uXcCPcZozH8
📞 தொடர்புகளுக்கு:
📱 தொலைபேசி: 011-2505569
📧 மின்னஞ்சல்: cru.hrcsl@gmail.com
🌟 ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!
சிறுவர் குரலெழுப்பும் மன்றில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். சிறுவர்களின் குரலை அனுமதிப்போம், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்.
📢 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.
#ChildrensVoiceForum #HRCSL #ChildRightsUnit #ForEveryChildEveryRight #ChildRights #ParticipatoryApproach