கல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு

இந்தப் பிரிவானது அபிவிருத்தியை நோக்கி தனிமனிதன் ஒவ்வொருவரையும் கட்டியெழுப்புவதை நோக்காக் கொண்டு பொதுமக்களுக்கு மனித உரிமைகள் பற்றிய கல்வியறிவை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. மேலும், சர்வதேச மனித உரிமைகள் கலாசாரத்தைப் பலப்படுத்துவதும், தனிநபர்களினதும் குழுக்களினதும் கலாசார தனித்துவங்களை வெவ்வேறு நாகரிகங்களைச் சேர்ந்தவர்கள் மதிப்பளித்து கௌரவிப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ளச் செய்வதும் கல்வியறிவைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை உறுதி செய்யும் நடைமுறைகளாகும். இலங்கை மனித உரிமைகள் சட்டத்தின் பிரிவுகள் 10(ஊ),11(ஊ) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மிகமுக்கியமான விடயங்கள், மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் வழங்குவதற்கு இப்பிரிவிற்கு ஆணையதிகாரத்தை வழங்குகின்றது. இதனைப் பரந்த மட்டத்தில் மனுத உரிமைகள் சார்ந்து நோக்கினால், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஆகிய இரண்டு உடன்படிக்கைகளையும் கல்வி மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான பிரிவு தன்னுடைய செயற்பாடுகளில் உள்ளடக்கியுள்ளது.

பிரதான செயற்பாடுகள்:

 • வெவ்வேறு இலக்குக் குழுவினருக்கும் பொருத்தமான மனித உரிமைகள் கற்கைநெறிகளைத் தயாரித்தல்
 • மனித உரிமைகள் பயிற்சித் திட்டங்களையும் கைநூல்களையும் தயாரித்து வெளியிடுதல்
 • மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், விசேட சொற்பொழிவுகள்,  செயல்முறை விளக்கங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடாத்துதல்
 • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சார்ந்த பணியாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களை அமுல்படுத்தல்
 • சர்வதேச மனித உரிமைகள் தினம், சிறுவர் தினம், மகளிர் தினம் போன்ற தினங்களை நினைவுகூறும் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்
 • தொலைக்காட்சி, வானொலி கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்
 • மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சேவையைக் கோரும் பிற நிறுவனங்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தல்
 • மனித உரிமைகள் கற்கைநெறி தொடர்பான ஆலோசனைகள் வழங்கல்
 • தேசிய வைபவங்களின்போதும், விசேட நிகழ்வுகளின்போதும் மனித உரிமை தொடர்பான கண்காட்சித் திடல்களை அமைத்தல்
 • அச்சு ஊடகங்களிலும், சஞ்சிகைகளிலும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்தல்
 • சர்வதேச அமைப்புகளின் நிதியுதவியின் கீழ் இடம்பெறும் விசேட கருத்திட்டங்களை நிர்வகித்தல்

மனித உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்வோர் அல்லது இப்பிரிவிற்கு தமது ஆலோசனைகள வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டியது:

பணிப்பாளர்பணிப்பாளர்கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் பிரிவு
இல. 165 கின்சி வீதி,
பொரளை,
கொழும்பு 08

தொலைபேசி: +94 11 2686282
தொலைநகல்: +94 11 2694924