கண்டி பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

கண்டி பிராந்திய அலுவலகம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் உப அலுவலகம் நுவரெலியாவில் அமைந்துள்ளது. (வியாழக்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும்).

நிர்வாகப் பிரிவுகள்:

கண்டி பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. கண்டி மாவட்டத்தின் பரப்பளவு: 1940 ச.கிமீ. இங்கு 04 பிரதேச செயலகங்களும் 102 கிராம சேவையாளர் பிரிவுகளும் காணப்படுகின்றன. மாத்தளை மாவட்டத்தின் பரப்பளவு, 1993 ச.கிமீ. இங்கு 11 பிரதேச செயலகங்களும், 545 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளன.  நுவரெலியா மாவட்டம் 1741 ச.கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள அதேவேளை, 05 பிரதேச செயலகங்களும், 491 கிராம சேவையாளர் பிரிவுகளையும் இம்மாவட்டம் உள்ளடக்கியுள்ளது.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத்தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்
கண்டி 947900 168049 52052 103622 7405 1279028
மாத்தளை 353579 38462 24320 23493 1474 441328
நுவரெலியா 282621 16555 46066 355830 2538 703610

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 54 (கண்டி-24, மாத்தளை-10, நுவரெலியா-20)
சிறைச்சாலைகள்: 02 (திறந்த சிறைச்சாலை- 01, சாதாரண சிறைச்சாலை-01)
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 01( போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான மெத்செவன புனர்வாழ்வு நிலையம்)
சிறுவர் இல்லங்கள்: 01

சமர்ப்பிக்கபடும் அறிக்கைகள்:

மாதந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
இல 8/1, பிரிம்ரோஸ் சாலை,
கண்டி.

தொலைபேசி/தொலைநகல் : 081-2234600
மின்னஞ்சல் : [email protected]