வவுனியா பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

வவுனியா பிராந்திய அலுவலகம், இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில்  அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்:

வவுனியா பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. வவுனியா மாவட்டத்தின் மொத்த பரப்பளவு: 1967 ச.கிமீ ஆகும். இதன் கீழ் 04 பிரதேச செயலகங்களும், 102 கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைந்துள்ளன. 2617 ச.கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 பிரதேச செயலகங்களும், 127 கிராம சேவையாளர் பிரிவுகளும் காணப்படுகின்றன. மன்னார் மாவட்டம் 1996 ச.கிமீ பரப்பளவைக் கொண்டு விளங்குவதுடன், 153 கிராம சேவையாளர் பிரிவுகள் இம்மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் உள்ளடங்குகின்றன.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத்தமிழா் ஏனையவர்கள்
வவுனியா 13535 11594 157917 183046
முல்லைத்தீவு 01 193 220117 220311
மன்னார் 55 8073 95560 103688

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 13 (வவுனியா-03, முல்லைத்தீவு-04, மன்னார்-06 )
சிறைச்சாலைகள்: 02 (வவுனியா 01, மன்னார்-01)
ஏனைய தடுப்பு நிலையங்கள்/ புனர்வாழ்வு நிலையங்கள்: 08
சிறுவர் இல்லங்கள் :14

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
இல 26/2, வெளிச் சுற்று சாலை,
வவுனியா.

தொலைபேசி/தொலைநகல்: 024-2222029
மின்னஞ்சல் : [email protected]