திருகோணமலை பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தில் இப்பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப்பிரிவு:

இம்மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 230 கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைந்துள்ளன.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 334,363 ஆகும். இத்தொகை கீழ்வரும் இனவிகிதாசாரப் பரம்பலைக் கொண்டுள்ளது:
சிங்களவர்: 84,766
இலங்கை முஸ்லிம்கள்: 151,692
இலங்கைத் தமிழர்: 95,652
இந்தியத் தமிழர்: 490
பறங்கியர்: 967
ஏனையவர்கள்: 796

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 13
சிறைச்சாலைகள்: 01
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 0
சிறுவர் இல்லங்கள்: 18

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
227, பிரதான வீதி,
திருகோணமலை

தொலைபேசி/தொலைநகல்: 026-2222607
மின்னஞ்சல்: [email protected]