ஆவணக்காப்பகம்

இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு தன்னுடைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென சிறந்த ஆவணக் காப்பகம் ஒன்றைப் பேணிவருகின்றது. பிரதான நூலகம் அதன் தலைமையகத்தில் அமைந்துள்ளதுடன் பிராந்திய அலுவலகங்களும் சிறியளவிலான ஆவணக்காப்பகங்களைப் பேணி வருகின்றன.

கிடைக்கப் பெறும் வசதிகள்

A) துறைசார் வெளியீடுகள்

 • மனிதஉரிமையுடன் தொடர்புடைய நூல்கள்
 • உள்ளூர் மற்றும் வெளியூர் செய்திமடல்கள், சஞ்சிகைகள், கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் விபரத் திரட்டுகள்
 • அரசாங்கப் பதிப்புகள் (பாராளுமன்ற ஹன்சாட் பதிவுகள் 2004-2006, வர்த்தமானிப் பதிப்புகள் மற்றும் சட்டமூலங்கள்)
 • சட்டவாக்கங்கள்
 • இலங்கை நியதிச் சட்டங்கள்
 • உயர்நீதிமன்றத்தின் அறிக்கையிடப்படாத தீர்ப்புகள்
 • இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள்
  • -ஆண்டறிக்கைகள்
  • விசேட விஜயங்கள் தொடர்பான அறிக்கைகள்
  • உண்மைகளைக் கண்டறியும் குழுவின் அறிக்கை
  • மாதாந்த அறிக்கைகள்
  • மனிதஉரிமை ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
 • ஓடியோ மற்றும் வீடியோப் பதிவுகள்- மனிதஉரிமை விடயங்களுடன் தொடர்புடைய ஆவணப்படங்கள்
 • மனிதஉரிமை விடயங்கள் சார்ந்த பொதுநிர்வாக சுற்றுநிருபங்களின் தொகுப்பு
 • மனிதஉரிமை தொடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்களும் கட்டுரைகளும்

B.) மனிதஉரிமை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவும் தபால் மூலமாகவும் வழங்கல்

C.) இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட மனிதஉரிமைகள் ஆவணங்களை வழங்கல்

D.) ஆணைக்குழு பணியாளர்களுக்கு நூல்கள் வழங்கும் சேவை

E.) ஆவணங்கள் ஏதும் தேவைப்படின் புகைப்படப் பிரதி செய்தி வழங்கும் சேவை

ஆவணக்காப்பகம் திறந்திருக்கும் நேரம்: சனி, ஞாயிறு தவிர்ந்த வார நாட்களில் காலை 9 மணி முதல் 4 மணிவரை

மேலதிகத் தகவல்களுக்கு:

ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர்,
இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு,
108, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07.

தொலைபேசி: +94 11 2694925 (Ext: 231)
தொலைநகல்:+94 11 2694924
மின்னஞ்சல்:[email protected]