ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள்
நீதியரசர் பிரியந்த ஆர்.பி.பெரேரா
தவிசாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

936ம் ஆண்டு யூன் 22ம் திகதி பிறந்த இவர், 1965ம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியிலிருந்து மேல் நீதிமன்ற வழக்கறிஞராக வெளியேறியதைத் தொடர்ந்து மேல் நீதிமன்ற வழக்கறிஞராக நியமனம் பெற்றார். சட்டத்தரணிகள் திணைக்களத்தில் கிரவுன் கவுன்சிலாகவும், சிரேஷ்ட கிரவுன் கவுன்சிலாகவும் உதவி சட்டமா அதிபராகவும் நெடுங் காலம் பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர், 1983ல் மேல் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக நியமனம் பெற்றார். 1990ல் மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2001ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இளைப்பாறும் வரையிலும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் விளங்கினார்.

இலங்கை லஞ்ச ஊழல் விசாரணத் திணைக்களத்தின் பிரதி ஊழல் ஆணையாளராகவும் பணியாற்றினார். மேல் நீதி மன்ற நீதியரசராகப் பணியாற்றும் பொழுது சில அரச சபைகளில் தவறான நடவடிக்கைகளையும் முறைகேடுகளையும் விசாரிக்கும் விசேட ஆணைக்குழுவின் தலைவராகவும் 1996ல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். 2006ம் ஆண்டு கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் பெரேரா அவர்கள் மேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார்.

மேலும் இலங்கை சட்டக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பரீட்சையாளராகவும் மட்டுமன்றி கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட வருகை விரிவுரையாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்ட சட்ட மற்றும் நீதி பரிபாலன சீர் திருத்தங்களின் முன்னாள் சட்ட ஆலோசகராகவும் யுஎன்டிபி யின் சட்ட மீள்நோக்குத் திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டதுடன் பல்வேறு சட்ட விடயங்களில் கட்டுரைகளையும் சமர்ப்பித்திருந்தார்.


மேலே செல்ல
திருமதி ஜெசிமா இஸ்மாயில்
ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இவர் 1955ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைமானிப் பட்டதாரியான இவர் 1966ல் மக் கில் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முதுமானி பட்டம் பெற்றார். தனது முதுகலைமானி ஆய்வாக இனங்களுக்கிடையிலான அமைதிக்கும் புரிந்துணர்வுக்கும் முறைசார் மற்றும் முறைசாரா கல்வி அமைந்திருந்தது. மேலும் 1972ல் சிட்னி பல்கலைக்கழகத்தில் TEFL டிப்ளோமா தகைமையும் பெற்றிருந்தார்.

திருமதி ஜெசிமா இஸ்மாயில் கற்பித்தலில் 32 வருட கால அனுபவம் கொண்டவர். கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்தார்.

இவர் தற்பொழுது கீழ்வரும் பதவிகள் வகி்க்கின்றார். தலைவர், பவ்ரல் அமைப்பு, தலைவர், எமிரட்டஸ், ஸ்தாபகர் இலங்கை முஸ்லிம் மகளிர் மாநாடு, ஸ்தாபக தலைவர், மகளிருக்கான வளர்ந்தோர் கல்வி, இலங்கைமனித உரிமைகள் நிலையம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முகாமைத்துவச் சபையின் உறுப்பினர், முஸ்லிம் மகளிர் ஆராய்ச்சி நடவடிக்கை மன்றின் ஒருங்கிணைப்பார், மகளிர் சாரணீய ஒன்றியத்தின் உப தலைவர், இலங்கை ஹெல்ப்பேஜ் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்.

இவர் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். தீவிர மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக விளங்கியவர். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராகவும், மார்கா நிறுவனத்தின் (அபிவிருத்தி கற்கைகளுக்கான இலங்கை நிறுவகம்)ஆளுனராகவும் விளங்கினார், பல்கலைக்கழக மகளிர் சார்க் சம்மேளனத்தின் ஸ்தாகராகவும் முன்னாள் தலைவராகவும் (1997-98) இருந்தார். இலங்கை ஔிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் பிரதித் தலைவராகவும், பாகிஸ்தான் (1992) மற்றும் பங்களாதேஷ் (1996) முதலிய நாடுகளின் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார். 1999ம் ஆண்டு நைஜீரியா ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பொதுநலவாய அவதானிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார். இதைவிட இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ சபையின் முன்னாள் உறுப்பினராகவும், ஆங்கிலமொழி விருத்திக்கான இலங்கை ஒன்றியத்தின் ஸ்தாபகராகவும், சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் விளங்கியிருந்தார்.

இவர் புகழ்பெற்ற பல வெளியீடுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தார். கல்வி, பெண்கள், ஊடகம், மற்றும் மதம் தொடர்பான விடயங்களில் பல நூல்களை எழுதியுள்ளார்.

உலகின் செல்வாக்குமிக்க முதல் 500 முஸ்லிம்களில் ஒருவராக திருமதி.ஜெசிமா இஸ்மாயில் அவர்களின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முறைசார், முறைசாரா கல்வி, மகளிர் மற்றும் சிறுவர், மதம், ஊடகம் போன்ற துறைகளில் இவரின் செயற்பாடு காணப்படுகின்றது.

1989ல் தேசிய சேவைக்கான ஜனாதிபதி விருதான தேசபந்தி விருது, 1991 மற்றும் 1993ல் கல்வியலாளருக்கான லயன் விருது, 1992ல் சொன்டா சாதனைப் பெண்மணி விருது, 1999ல் கல்வித்துறைக்கான ஜனாதிபதி விருது மற்றும் 2009ல் சர்வோதய நம்பிக்கை நிதியத்தின் தேசிய விருது முதலிய விருதுகளை இவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலே செல்ல
கலாநிதி மகாதுர ஆனந்த ஜஸ்டின் மென்டிஸ் ,
ஆணையாளர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இவர் 1941ம் ஆண்டு யூன் 4ம் திகதியன்று பிறந்தார். 1965ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் சிறப்புடன் விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1974ல் கிளாஸ்கோ ஸ்ரத்க்ளைட் பல்கலைக்கழகத்தில் தடயவியல் விஞ்ஞானத்தில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து திறந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி சிறப்புப் பட்டம் பெற்றார். இலங்கை இரசாயனவியல் நிறுவகத்தின் உறுப்பினராகவும் ஐக்கிய ராச்சியத்தின் றோயல் இரசாயனச் சங்கத்தின் உறுப்பினராகவும் விளங்கி வருகின்றார். மேலும், இலங்கை இரசாயனவியல் நிறுவகத்தினதும் ஐக்கிய இராச்சியத்தின் றோயல் இரசாயனச் சங்கத்தினதும் பட்டய விஞ்ஞானியாகவும் உள்ளார்.

பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் திணைக்களத்தின் உதவி விரிவுரையாளராக ஆரம்பப் பணியாற்றினார். பின்னர் 1966இல் உதவி அரசாங்க பகுப்பாய்வாளராக அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட உதவியாளராகவும் பின்னர் உதவி மற்றும் மேலதிக அரசாங்க பகுப்பாய்வாளராகவும் பதவி வகித்தார். நவம்பர் 1999 முதல் அரசாங்க பகுப்பாய்வாளராகப் பதவி உயர்த்தப்பட்டார். டாக்டர். எம்.ஏ.ஜே மென்டிஸ் அவர்கள் இதுவரை மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான குற்றவியல் வழக்குகள் 1000க்கு மேற்பட்டவற்றுக்கு தடயவியல் நிபுணராக சாட்சியம் வழங்கியுள்ளார். நீதித்துறையினாலும் வழக்கறிஞர்களாலும் இவர் பெரிதும் சமமாக மதிக்கப்பட்டவர்.

கலாநிதி.எம்.ஏ.ஜே மென்டிஸ் அவர்கள் கீழ்வரும் கல்வி சார் சபைகளில் உறுப்பினராக விளங்குகின்றார். ஜெவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோகவிஞ்ஞானப் பீடம், தேசிய அழகுசாதனப் பொருட்கள், உபகரணங்கள், மற்றும் ஔடதக் கட்டுப்பாட்டு ஆலோசனைச் சபை, தேசிய ஆபத்தான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சபை, கொழும்பு பட்டப்பின் மருத்துவக் கல்லூரியின் தடயவியல் விஞ்ஞானக் கற்கைகள் சபை மற்றும் இலங்கை தொழினுட்ப சேவைகள் சபை. மேலும் இலங்கை தர நிர்ணய நிறுவகத்திற்காகத் தரநியமங்களை உருவாக்கஇலங்கை நிதியமைச்சு, இலங்கை காவல் துறை, இலங்கை கடற்படை ஆகியவற்றின் பல்வேறு கூறுவிலை கோரல் சபை, மற்றும் தொழினுட்ப மதிப்பீட்டு குழு ஆகியவற்றிலும் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார்.

கல்வித்துறையிலும் இவரது பங்களிப்பு காணப்பட்டமை குறுப்பிடத்தக்கது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் மருத்துவக் கல்வி நிறுவகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், ஶ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல்பீடம், சமூகவியல் மற்றும் மானிடவியல் பீடம், றுகுணு பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் திணைக்களம், கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி, பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் வருகைதரும் விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார். இதைவிட இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள சம்பல்பூர் பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டப்படிப்புக்கான பரீட்சை மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இவர் தற்பொழுது செலிங்கோ இன்சூரன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஜனசக்தி காப்புறுதி, கப்பிடல் மகாராஜா நிறுவனம் ஆகியவற்றின் ஆலோசக தடயவியல் நிபுணராக விளங்குவதுடன், முன்பு ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவில் இதே பதவி வகித்திருந்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சித் திட்டத்தில் வளவாளராக பணிபுரிந்துள்ளார்.

மேலும், Analysis of Firearm Discharge Residues by atomic Absorption Spectroscopy (1974), A Treatise on Sub Machine Guns – Guide to Forensic Investigation (1993), Sri Lankan Shot Pistols and Ballistics- Science and Justice, Journal of the Forensic Science Society, UK (1997) போன்ற சர்வதேச நூல்களிலும், Aparada Vimarshanayata Rasa Chasakayak (Sinhala publication from 2000) – என்ற இங்கையில் வெளியிடப்படும் விஞ்ஞான குற்றவியல் புலனாய்வு இதழையும் வெளியிட்டு வருகின்றார்.

2006ம் ஆண்டில் பிரித்தானியாவின் றோயல் இரசாயன சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர் மற்றும், றோயல் இரசாயன சங்கத்தின் இலங்கைப் பிரிவின் நீண்டகால உறுப்பினருக்கான விருதுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. இவர் பொதுத்துறையில் பணியாற்றிய வேளையில் தடயவியல் விஞ்ஞானத்தின் பல பிரிவுகளில் நீண்ட கால குறுங்கால சர்வதேசப் புலமைப் பரிசில்களை இவர் பெற்றிருந்தார்.

விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியை மணம்புரிந்த இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண்பிள்ளைகளும் உண்டு. இவர்களில் இருவர் மருத்துவக் கலாநிதிகளாகவும், ஒருவர் பொறியியல்துறை கலாநிதியாகவும் இன்னொருவர் கட்டடக்கலை நிபுணராகவும் உள்ளனர்.


மேலே செல்ல
ரி.ஈ.ஆனந்தராஜா ,
ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1966ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்ததும் இலங்கை காவல் திறையில் இணைந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர், அத்தியட்சகர், சிரேஷ்ட அத்தியட்சகர் ஆகிய பதவிகளில் எல்பிட்டிய, மொனராகலை, யாழ்ப்பாணம், களனி, கொழும்பு, தங்காலை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் பணிபுரிந்தார். காவல்துறை நிர்வாகத்திற்கு மேலதிகமாக பொலிஸார் மீதான நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளையும் இவர் விசாரித்தார். இவற்றில் அனேகமானவை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களாகும். சிரேஷ்ட சுப்பிரிண்டன்ட் என்ற வகையில் பொலிஸ் தலைமையகத்தின் கீழ் உள்ள விசேட புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் கடந்த 3 வருட காலமாக செயற்பட்டதுடன் காவல் துறைக்கு எதிரான அனைத்து முறைப்பாடுகளையும் விசாரணை செய்தார். இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பிரதாயபூர்வமான விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.

உதவிப்பொலிஸ்மா அதிபர், மற்றும் சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் என்ற வகையில் பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த வேளையில் நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமையாற்றியிருந்தார். மேலும், விசேட பொலிஸ் றிசேர்வ் கட்டளை தலைமையகத்தில் சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபராகப் (நிர்வாகம்) பணியாற்றிய வேளையில் நிதி, நிர்வாகம், மனிதவள முகாமைத்துவம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக விளங்கினார். பின் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையுடனும், இலங்கைப் பாதுகாப்புப் பிரிவுடனும் இணைந்து இரண்டு வருட காலத்துக்கு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டார்.

2002-2003 வரையான காலத்தில் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றினார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற மனிதஉரிமைகள், விசாரணை பற்றிய பல்வேறு பயிற்சித் திட்டங்கள், செயலமர்வுகள், மற்றும் மாநாடுகளில் இவர் பங்குபற்றியிருந்தார்.

2000ம் ஆண்டில் பட்டப்பின் முகாமைத்துவக் கல்வி நிறுவகத்தின் பழைய மாணவர் ஏற்பாட்டில் சமூகத்தில் கௌரவமிக்கவர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அடிப்படையாக வைத்து கீழவரும் இரண்டு நூல்களை இவர் எழுதினார். 1994ம் ஆண்டில் பிராந்திய அபிவிருத்தி கற்கை நிலையத்தினால் பிரசுரிக்கப்பட்ட “மாகாணசபை நடைமுறையும் சட்ட மற்றும் ஒழுங்குமுறைகளின் பரவலாக்கமும்” மற்றும் 2002ம் ஆண்டில் இனத்துவக் கற்கைகளுக்கான நிலையத்தினால் பிரசுரிக்கப்பட்ட “காவல்துறை- அதிகாரப்பரவலுக்காக நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் செயற்திட்டம்”

பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்ற கலைமானி பட்டத்துக்கு மேலதிகமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தையும், ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைமானிப் பட்டத்தையும், சட்டக்கல்லூரியில் சட்டத்தரணியாகவும் பட்டம் பெற்றார். 2005ம் ஆண்டில் இலங்கை மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


மேலே செல்ல
கலாநிதி பேர்ணாட் டி சொய்சா ,
ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1961ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். மேலும் இலங்கையில் எவ்சிஜிபி தகைமையும் இவருக்கு உண்டு.

மாவட்ட வைத்திய அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியிருந்தார். 1981 இல் கிளினிக் மற்றும் நேர்சிங் ஹோம் ஒன்றை ஸ்தாபித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக அன்று முதல் செயற்பட்டு வருகின்றார். அத்துடன் குடும்ப வைத்திய ஆலோசனையில் சிரேஷ்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகின்றார்.

இதைவிட பல்வேறு நிறுவனங்களில் பல பதவிகளை இவர் வகித்துள்ளார். இலங்கை சுதந்திர மருத்துவர்கள் ஒன்றியத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் பதவி வகித்திருந்தார். ஒபிஏ அமைப்பினதும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினதும் முன்னாள் அங்கத்தவராக இவர் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலே செல்ல

முன்னர் பதவியிலிருந்த ஆணைக் குழுக்கள்

1997 – 2000
     
தவிசாளர் நீதியரசர் O.S.M செனவிரத்ன
ஆணையாளர் நீதியரசர் T. சுந்தரலிங்கம்
ஆணையாளர் கலாநிதி A.T ஆரியரத்ன
ஆணையாளர் பேராசிரியர் அர்ஜூன அளுவிஹார
ஆணையாளர் திரு. ஜாவிட் யுசூfப்
2000 – 2003
தவிசாளர் திரு. பாயிஸ் முஸ்தபாZ
ஆணையாளர் கலாநிதி கொட்fபிறே குணதிலக
ஆணையாளர் திருமதி மனோரி முத்தட்டுவேகம
ஆணையாளர் திரு. சரத் குரே
ஆணையாளர் திரு. N. செல்வகுமாரன்
ஆணையாளர் கலாநிதி A. சைநுதீன்
2003- 2006
தவிசாளர் கலாநிதி ராதிகா குமாரசுவாமி
ஆணையாளர் திரு. N. செல்வகுமாரன்
ஆணையாளர் திருமதி C. சேனநாயக்க
ஆணையாளர் கலாநிதி தீப்பிகா உடகம
ஆணையாளர் கலாநிதி  A. சைநுதீன்
2006 – 2009
தவிசாளர் நீதியரசர் (மறைந்த) ராமநாதன் (நவம்பர் 2006 வரை)
நீதியரசர் S.ஆனந்த குமாரசுவாமி
ஆணையாளர் நீதியரசர் D. ஜயவிக்ரம
ஆணையாளர் திரு. மகாநாம திலகரத்ன
ஆணையாளர் திருமதி. அபேவர்தன
ஆணையாளர் திரு M.T.M. பவிfக்
2011 – 2015    
ஆணையாளர் கலாநிதி M.A.J. மெனடிஸ்
    (18 மாசி மாதம் 2011 – 01 மாசி மாதம் 2012)
ஆணையாளர் கலாநிதி ஸ்ரீ வர்ண பிரதிபா மஹானாமஹேவா
(09 மாசி மாதம் 2012 – 08 மாசி மாதம் 2015)