கருத்திட்டங்கள்

UNDP உடன் இணைந்த மனித உரிமை நிகழ்ச்சித் திட்டங்கள்

இந்த இணைந்த நிகழ்ச்சித் திட்டமானது, பிராந்திய மட்டத்தில் ஆணைக்குழுவின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது. அத்துடன், சிவில் சமூகக் கூட்டங்களையும், பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களின் கலந்துரையாடல்களையும் நடாத்துவதற்கு இத்திட்டம் உதவிபுரிந்ததுடன் HRCSL இணையதளத்தை மேம்படுத்தவும் வேண்டிய ஒத்தாசைகளை வழங்கி வருகின்றது.

திட்ட அலுவலகம்

மனித உரிமைகள் தொடர்பான கூட்டு நிகழ்ச்சித் திட்டம்

முகவரி: இல. 165 கின்சி வீதி, கொழும்பு 08
தொலைபேசி: 011 5013245
தொலைநகல்: 011 5023495
மின்னஞ்சல்: [email protected]

 

சிறுவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான முறைப்பாடுகனை முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்தல் –  UNICEF

 

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்கு ஆயுத முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறுவர் உரிமைகளின் மீறல் சம்பவங்களில் பிரயோகிக்கக்கூடிய சட்டவிதிமுறைகளையும், அதற்கு நிவாரணம் வழங்கும் அமைப்புக்களையும் அணுகக்கூடிய வழிமுறைகளையும் அங்கு முறையிடும் வல்லமையையும் மட்டக்களப்பு, நுவரெலியா, கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இது தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் தொடர்ச்சியான கூட்டங்களும் சமூக மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.