கண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு

இப்பிரிவின் பிரதான பொறுப்பு, இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த ஆணைக்குழுவின் கடமைகளை நிறைவேற்றுவதாகும். இப்பிரிவின் முதன்மை நோக்கம், இலங்கையில் மனித உரிமைகள் எந்தளவில் மதிப்பளிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணித்தல். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள மனிதஉரிமைகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான தர நியமங்களுக்கும்  இடையிலான ஒற்றுமைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு இப்பிரிவானது, திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில்  வகுத்து அமுல்படுத்துகின்றது.

தற்போதுள்ள சட்டவாக்கத்தின் கீழ் இயங்கும் ஆணைக்குழுவின் அனுமதியின்பேரிலேயே தனது கடமைகளை நிறைவேற்றி வருகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டவாக்கத்தையும், விதிமுறைகளையும் இப்பிரிவு தொடர்ந்தும் மீளாய்வு செய்து வருகின்றது. அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ள அரச நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு செய்வதன் மூலம், அவ்வாறான உரிமை மீறல்கள் நேரும் பட்சத்தில்  அவை தொடர்பான சுட்டிக்காட்டுதல்களையும் பரிந்துரைகளையும் உரிய நிர்வாக உயர் பீடங்களுக்குத் தெரியப்படுத்தி எதிர்காலத்தில் அவ்வாறான மீறல்கள் இடம்பெறாமல் தடுத்தல்.

பிரதான செயற்பாடுகள்:

 

  • நாட்டில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கவலைக்குரிய மாற்றங்கள் தொடர்பில் ‘உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகளை’ மேற்கொள்வதுடன், உரிய அதிகார அமைப்புகளுக்கு அவை தொடர்பில் பரிந்துரைகள் வழங்குவதும்.
  • குறிப்பிட்ட மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளல்
  • நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பெண்கள், சிறுவர்களின் காப்பகங்களுக்கு விஜயம் செய்தல்
  • மனித உரிமைகள் சார்ந்த பின்னணியில் அவை தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கைப் பத்திரங்களை அரசாங்கத்திற்காகத் தயாரித்தல்
  • உரிமைகள் உடையவர்களுக்கு வேண்டிய சேவைகளை வழங்கும் பொருட்டு அரச அதிகாரிகளுக்கு பொதுவான வழிகாட்டல்களைத் தயாரித்து வழங்கல்
  • உரிய அதிகார அமைப்புகளுடன் உயர் மட்ட ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்
  • விசேட அறிக்கைகள் தயாரித்து அரசாங்கத்திற்கு வழங்குதல்
  • ஏனைய மனித உரிமை நிறுவனங்கள் நடாத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்தல்
  • ஆய்வுகளின் மூலமாகக் கிடைத்த முடிவுகளைத் தெரியப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல்
  • அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகளைக் கண்காணித்தல்

இப்பிரிவு பற்றிய மேலதிக தகவல்களைப் பெறவிரும்புவோர், பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்:

பணிப்பாளர்

கண்காணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவு
இல. 165 கின்சி வீதி,
பொரளை,
கொழும்பு 08

தொலைபேசி: +94 11 2673806
தொலைநகல்: +94 11 2673806