எம்மைப் பற்றி

தாபிதம்

சர்வதேச மட்டத்தில் பல்வேறுபட்ட சா்வதேச உடன்படிக்கைகளால் இலங்கை கடமைகளை செய்யவும் கடப்பாடுகளை வலியுறுத்தவும், இலங்கை ஐக்கிய நாடுகளில் அங்கத்துவர் என்ற அடிப்படையில் மனித உரிமைகள் பாதுகாப்பினை அமுல்படுத்தி ஈடுபடவும் பரீஸ் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களை பராமரிக்கவும் 1996ம் ஆண்டு அரசாங்கம் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை உருவாக்கியது.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு சுயாதீன ஆணைக்குழு ஆகும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் இரண்டு வேறு நிறுவனங்கள் தாபிக்கப்பட்டிருந்தன.
ஒன்று: சட்ட விரோத தடுப்புகளையும் கைதுகளையும் தடுக்கின்ற மனித உரிமைகள் செயலணி (HRTF),
மற்றையது: பாரபட்சத்தைத் தடுப்பதற்கான பாரபட்சத்தை இல்லாதொழிக்கும் மற்றும் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஆணைக்குழு (CEDMHR).

தொலை நோக்கு

“அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் செய்வதும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்துப் பாதுகாப்பதுமே எமது தொலைநோக்காகும்”.

பணிக்கூற்று

அனைவருக்குமான மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் மார்க்கத்தில் பணியாற்றும் சகல பங்காளிகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்புடன், இலங்கைப் பிரஜைகளுக்காக இலங்கை அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை விஷேடமாக வலியுறுத்தி, சா்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமை விதிகள், கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்காக மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன்மூலம் இலங்கையில் ஒரு சிறப்பான மனித உரிமைகள் கலாசாரத்தை விருத்தி செய்வதே எமது பணிக்கூற்றாகும்.