விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 11(அ), 10(அ), மற்றும் (ஆ) க்கு அமைய அடிப்படை உரிமைகள் முறைப்பாடு செய்யப்பட்ட சட்டமீறல்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள்  தொடர்பாகப் புலனாய்வு செய்யவும் விசாரணை செய்யவும் பொறுப்பினை இப்பிரிவு கொண்டுள்ளது. இது தனித்துவமான முறைப்பாட்டினைக் கையாளும் முறையையும் தீர்வு நடைமுறையையும் கொண்டிருக்கின்றது. இப்பிரிவானது சமூகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும் மனிதஉரிமை மீறல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் முன்னேற்பாடான நடவடிக்கைகளையும் பின்னரான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.

பிரதான செயற்பாடுகள்:

 • ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிய முன்பாகப் பொதுமக்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரணைகள் மேற்கொண்டு அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கல்
 • தனிப்பட்ட முறைப்பாடுகளைக் கையாளல்
 • விசேட விசாரணைகளை மேற்கொள்ளல்
 • முறைப்பாட்டை மேற்கொள்ளும் தனிநபருக்கான தரவுதளத்தைப் பேணுதல்
 • சொந்தப் பிரேரணையில் பெற்றுக்கொள்ளும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல்
 • உயர் நீதிமன்றத்தினால் ஆற்றுப்படுத்தும் விடயங்களுக்கு ஆணைக்குழுவுக்கு உதவுதல்
 • தடுப்புக் காவல் நிலையங்களான பொலிஸ்நிலையங்கள், தடுப்பு நிலையங்கள், சிறைச்சாலை மற்றும் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட இல்லங்களுக்குக் கிரமமான விஜயங்களை ஒழுங்கு செய்தல் அத்துடன் அங்குள்ள நபர்களின் நிலைமைகளைப் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கல்
 • உரிய அதிகார அமைப்புகளினால் வழங்கப்பட்ட தடுப்புக்காவலுக்கான கட்டளைகளைக் கொண்டுள்ள தரவுதளத்தைப் பேணுவதும் கண்காணித்தலும்
 • நாட்டில் அடையாளங் காணப்பட்ட குறிப்பான மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான விசேட விஜயங்களை ஒழுங்குபடுத்தலும் உரிய அதிகார அமைப்புகளுக்குப் பரிந்துரைகள் வழங்கலும்
 • சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள், தடுத்து வைத்தல் தொடர்பாகப் பொதுமக்கள் உடனுக்குடன் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துவதற்ககாக 24 மணிநேரத் தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கல்.
 • சிவில் சமூகக் குழுக்களின் கூட்டங்களை ஒழுங்குபடுத்தல்

அறிக்கைகள்

மாதாந்த முறைப்பாட்டுப் பட்டியல்- 2011- தலைமை அலுவலகம்

மேலதிக தகவல்களைப் பெற விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்

பணிப்பாளர்,
விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு

இல. 165 கின்சி வீதி,
பொரளை,
கொழும்பு 08

தொலைபேசி: +94 11 2674200
தொலைநகல்: +94 11 2674200