இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மாற்றுத்திறனாளியாகிய பட்டதாரி மாணவியின்; கல்வி உரிமை தொடர்பாக பரிந்துரையொன்றை வெளியிட்டுள்ளது

November 15, 2018

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ கல்வி நிறுவகத்தில் பயின்றுவருகின்ற பட்டதாரி மாணவியின் கல்வி உரிமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரையொன்று வழங்கியுள்ளது. அதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி, கொழும்பு பல்கலைக்கழக, உள்நாட்டு மருத்துவ கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிவாதிகள் மூவர் தொடர்பாக இப்பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரையினுள் கீழ்வரும் விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

  1. இந்த பட்டதாரி மாணவியின் கல்வி நடவடிக்கையை திறன்பட மேற்கொண்டு செல்வதற்காக வேறு பல்கலைக்கழகமொன்றிற்கு உள்ளெடுப்பதற்கான அனுமதியை வழங்கல்.
  1. அவருக்கு நடைபெற்ற இழப்பிற்காக தகுந்த நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதிவாதிகள் நால்வருக்கும் பணித்தல்.
  1. மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்தல்.
  1. மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக பல்கலைக்கழக முறைமைகளுள் வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தல்.
  1. மாற்றுத்திறனாளிகள் உள்ளீர்க்கும் விதமாக கல்வி முறைமைகளை மேலதிகமாக முன்னேற்றல்.
  1. மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்கலைக்கழக முறைமைகளுள் மேற்கொள்ளல்.

Download