2018 மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற சமய/இன ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக,

May 9, 2018

2018 மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற சமய/இன ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக,2018 மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஓர் விசாரணை இடம் பெறவுள்ளது.

இந்த விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள்மூலம் நடாத்தப்படவுள்ளது. இந்த விசாரணைக்கு முன்பாக, சம்பவங்கள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் எழுத்து மூல ஆவணங்களை முன்வைக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதும்குறிப்பிடத்தக்கதாகும்